My Account Login

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு லண்டனில் பிரித்தானியாப் பாராளுமன்றில் தொடங்கியது

உணவுத்தேவையை பூர்த்தி செய்தல் - சுற்றுச்சூழலை பாதுகாத்தல் - வெளியுறவுக்கொள்கை -ஆகியவை தொடர்பாக இன்றைய தமிழீழ தேசமும், நாளைய தமிழீழ அரசும் எதிர்கொள்ளும் சவால்கள்

LONDON, UNITED KINGDOM, December 3, 2022 /EINPresswire.com/ -- தாயகம், தேசியம், அரசியல் இறைமை எனும் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக திகளும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு பிரித்தானியா பாராளுமன்றில் தொடங்கியது.

https://youtu.be/A4bfMDi87zg

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள், தோழமையாளர்கள் உட்பட பலரும் புலம்பெயர் தேசங்களில் இருந்து நேரடியாக வந்து லண்டனில் முகாமிட்டிருக்கும் இவ்வேளை, உலக வள அறிஞர்கள் பலரும் இந்த அமர்வுகளில் பங்கெடுத்து. கருத்துரைகளை வழங்கினர்.

உணவுத்தேவையை தொடர்ந்து பூர்த்தி செய்தல் - சுற்றுச்சூழலை பாதுகாத்தல் - வெளியுறவுக்கொள்கை - ஆகியவை தொடர்பாக இன்றைய தமிழீழ தேசமும், நாளைய தமிழீழ அரசும் எதிர்கொள்ளும் சவால்கள்:

1) உணவுப் பற்றாக்குறை: கோவிட் பெருந்தொற்று, யுக்ரேனிய யுத்தம் மற்றும் ஊழல்/குறுகிய நோக்கு உடைய அரசியல் தலைவர்களின் முடிவு ஆகியவை உலகளாவிய ரீதியில் ஒரு பாரிய உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் பூரணமான உணவுத் தேவையை பூர்த்தி செய்வது உள்ளூரில் மாத்திரமல்லாது, உலகளாவிய ரீதியிலும் ஒரு பாரிய சவாலை ஏற்படுத்தி உள்ளது. தமிழீழ தேசம்- நாடற்ற தேசிய இனம் - உணவில் தன்னிறைவு அடையும் ஆற்றல்(sovereignty) தொடர்பாக இந்த அமர்வில் முக்கிய விவாதமாக எடுத்துக் கொள்ளப்படும். அத்துடன் தமது மக்களின் உணவுத்தேவையை தொடர்ந்து பூர்த்தி செய்வதற்கும், உலகளாவிய ரீதியான உணவு வழங்குதலில் நாளை மலரவிருக்கும் தமிழீழத் தனியரசின் பங்களிப்பு தொடர்பாகவும் விவாதிக்க உள்ளது.

2) சுற்றுச்சூழல் மாற்றமடைதல்: சுற்றுச்சூழல் மாற்றமடைவதால் ஏற்படும் பாரிய பாதிப்பை உலகம் எதிர் கொண்டு நிற்கிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாரிய விளைவுகளால் அதிக வெப்பம், அதிக மழை,தொடர் வறட்சி போன்ற பிரச்சனைகளை தெற்காசியா எதிர் கொள்ளவேண்டி வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. .இது உணவு உற்பத்தி, மண் வளம் மற்றும் மக்கள் விளை நிலங்களில் வேலை செய்தலில் பாதிப்பை ஏற்படுத்தி பாரிய மக்கள் இடம்பெயர்விற்கும் (migration)வழிசமைக்க உள்ளது. தனியரசு அமையாவிட்டாலும், தமிழீழத் தேசம், தேசமாக இருந்தாலும் சரி, அரசாக இருந்தாலும் சரி சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் பிரச்சனையை நிவர்த்தி செய்ய வேண்டிய கடப்பாடு உள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை சுற்றுச்சூழல் மாற்றத்தால் ஏற்படும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் நோக்கமாக விவாதிக்க உள்ளது. நாளைய சுதந்திர தமிழீழ அரசு உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது போல சுற்றுச்சூழலால் ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய்வது பற்றியும் விவாதிக்க உள்ளது

3) வெளிவிவகாரக் கொள்கை: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை, ஈழத்தமிழர்களின் சுதந்திரமும், இறைமையும் கொண்ட சுதந்திர தமிழீழ அரசு அமைக்கும் அரசியல் பெருவிருப்பிற்கும், பூகோள அரசியலிற்கும் வரலாற்று ரீதியாக உள்ள தொடர்பினைக் கருத்தில் கொண்டு தமிழீழத் தேசம், தமிழீழ அரசை அமைப்பதற்கு எவ்வாறான வெளிவிவகாரக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை விவாதிக்க உள்ளது. மேலும் நாளைய தமிழீழம் உலகில் அமைதிக்கும், சமாதானத்திற்கும், இடைவிடாத அபிவிருத்திக்கும் (sustainable development) எவ்வாறு பங்களிக்கலாம் என்பது தொடர்பாக வும் விவாதிக்க உள்ளது.

https://youtu.be/A4bfMDi87zg

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சி ஊடாக அமர்வின் முக்கிய அம்சங்களை நேரடியாக பொதுமக்கள் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Transnational Government of Tamil Eelam
TGTE
+1 614-202-3377
r.thave@tgte.org
Visit us on social media:
Facebook
Twitter

View full experience

Distribution channels: Human Rights, International Organizations, Media, Advertising & PR, Politics, World & Regional